மேலூரில் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள லாரி திருட்டு
மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் மேலூரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலூர் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்குச்சொந்தமான லாரியை திருவாதவூர் சாலையில் வழக்கம்போல நிறுத்தும் இடத்தில் 19-ம் தேதி இரவு நிறுத்திவைத்த டிரைவர் பாண்டி, லாரி சாவியை அழகர்சாமியிடம்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாராம். இந்தநிலையில் காலையில் வந்துபார்த்தபோது லாரியைக் காணவில்லை.
பலஇடங்களில் தேடியும் லாரியைக் கண்டுபிடிக்க முடியாததால் மேலூர் போலீஸில் புகார் செய்தார் அழகர்சாமி. மேலூர் போலீஸார் லாரியைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...